Tuesday, September 16, 2008

ஏன்? எதற்கு? எப்படி?

குளோபல் வார்மிங் என்றால் என்ன?

உலக வெப்ப விகித மாற்றத்தின் காரணமாக துருவ பிரதேசங்களில் பனி மலைகள் உருகி, உலகம் முழுதும் உள்ள கடலோர பிரதேசங்கள் தண்ணீரில் மூழ்குவது முதல், பல மோசமான சுற்றுசுழல் மாற்றங்களும் சேர்ந்து உலகத்தை வாழ தகுதியில்லாமல் ஆக்குவதே குளோபல் வார்மிங் எனப்படும்.

குளோபல் வார்மிங் எப்படி ஏற்படுகிறது?

கார்பன் டையாக்ஸ்யடு , கிரீன் ஹௌஸ் வாயுக்கள் மற்றும் பல காற்று மண்டல மாசுக்களும் சேர்ந்து நம் பூமியை சுற்றி ஒரு கனமான படலத்தை ஏற்படுத்தி, சூரிய வெப்பத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்து, பூமி கோளத்தை மேலும் வேப்பப்படுத்துகிறது.

தொழிற்சாலைகள் மூலமும், நிலக்கரி மின்சாரம் மூலமும், வாகனங்கள் மூலமும் வெளிவரும் புகை தான் இதற்கு முக்கிய காரணம்.

நாளை தொடரும்.......


- விஜய் அத்ரேயன்

Monday, September 15, 2008

ஒரு இனிய தொடக்கம்.....

வணக்கம் நண்பர்களே!
IT எக்ஸ்னோரா வின் சார்பில் குளோபல் வார்மிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழில் நான் எடுத்த முயற்சியே இந்த தகவல் மென் தளம் . நான் சென்ற மாதம் முதல் it எக்ஸ்னோரா வில் இணைந்து அதன் ஆங்கில தகவல் மென் தளத்தில் செய்திகள் பிரிவில் பணியாற்றுகிறேன் . itexnora.org என்ற அந்த மேன்தளம் கடந்த சனி (13-09-2008) அன்று தமிழ் திரைப்பட நடிகர் திரு பிரஷாந்த் தலைமையில், பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் வருகையுடன் எக்ஸ்னோரா வின் இந்திய நிறுவனர் திரு நிர்மல் அவர்கள் தி நகரில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

IT எக்ஸ்னோரா - எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் ஒரு பகுதி. இதில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த பல நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் உறுப்பினர்களாக சேர்ந்து குளோபல் வார்மிங் பற்றிய விழிப்புணர்வை தங்கள் பணியிடங்களிலும் , வீடுகளிலும், தெருக்களிலும் , ஆன்லைன் னிலும் பரப்பி வருகின்றனர். இந்த அமைப்பு ஜூலை 13 2008 அன்று மீடியாகள் முன்னிலையில் , பல்வேறு துறை வல்லுனர்கள், பல தொழில் துறை நிறுவனங்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு ஏற்கனவே , குளோபல் வார்மிங் பற்றிய விழிப்புணர்வை " 88888 லைட்ஸ் ஆப் " மூலம் பலதரப்பட்ட மக்களிடையே ஏற்படுத்தி தன் தொண்டை சிறப்பாக செய்துவருகிறது. மேலும் தன் " 99999 லைட்ஸ் ஆப் " மூலம் அதிகமான மக்களுக்கு கார்பன் வெளியீடு மற்றும் குளோபல் வார்மிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நம் பூமியை குளோபல் வார்மிங் இல் இருந்து காத்து , ஒரு பசுமையான உலகை படைக்க போராடி வருகிறது. நிங்களும் IT-EXNORA கூகிள் குரூப்ல் இணைவது மூலமும் , itexnora.org மென் தளத்தில் உறுப்பினர் அவது மூலமும் , நம் உலகை வெப்ப அரக்கனிடம் இருந்து காப்பற்றலாம். வாருங்கள் வருங்கால உலகை , பசுமையான உலகாக மாற்றுவோம்....

- விஜய் அத்ரேயன்