Monday, September 15, 2008

ஒரு இனிய தொடக்கம்.....

வணக்கம் நண்பர்களே!
IT எக்ஸ்னோரா வின் சார்பில் குளோபல் வார்மிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழில் நான் எடுத்த முயற்சியே இந்த தகவல் மென் தளம் . நான் சென்ற மாதம் முதல் it எக்ஸ்னோரா வில் இணைந்து அதன் ஆங்கில தகவல் மென் தளத்தில் செய்திகள் பிரிவில் பணியாற்றுகிறேன் . itexnora.org என்ற அந்த மேன்தளம் கடந்த சனி (13-09-2008) அன்று தமிழ் திரைப்பட நடிகர் திரு பிரஷாந்த் தலைமையில், பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் வருகையுடன் எக்ஸ்னோரா வின் இந்திய நிறுவனர் திரு நிர்மல் அவர்கள் தி நகரில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

IT எக்ஸ்னோரா - எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் ஒரு பகுதி. இதில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த பல நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் உறுப்பினர்களாக சேர்ந்து குளோபல் வார்மிங் பற்றிய விழிப்புணர்வை தங்கள் பணியிடங்களிலும் , வீடுகளிலும், தெருக்களிலும் , ஆன்லைன் னிலும் பரப்பி வருகின்றனர். இந்த அமைப்பு ஜூலை 13 2008 அன்று மீடியாகள் முன்னிலையில் , பல்வேறு துறை வல்லுனர்கள், பல தொழில் துறை நிறுவனங்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு ஏற்கனவே , குளோபல் வார்மிங் பற்றிய விழிப்புணர்வை " 88888 லைட்ஸ் ஆப் " மூலம் பலதரப்பட்ட மக்களிடையே ஏற்படுத்தி தன் தொண்டை சிறப்பாக செய்துவருகிறது. மேலும் தன் " 99999 லைட்ஸ் ஆப் " மூலம் அதிகமான மக்களுக்கு கார்பன் வெளியீடு மற்றும் குளோபல் வார்மிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நம் பூமியை குளோபல் வார்மிங் இல் இருந்து காத்து , ஒரு பசுமையான உலகை படைக்க போராடி வருகிறது. நிங்களும் IT-EXNORA கூகிள் குரூப்ல் இணைவது மூலமும் , itexnora.org மென் தளத்தில் உறுப்பினர் அவது மூலமும் , நம் உலகை வெப்ப அரக்கனிடம் இருந்து காப்பற்றலாம். வாருங்கள் வருங்கால உலகை , பசுமையான உலகாக மாற்றுவோம்....

- விஜய் அத்ரேயன்

1 comment:

Gurus! said...

Excellent Initiative Vijay!